ஜப்பானை இன்று சுனாமி தாக்குமா?

தீர்க்கதரியும் மங்கா வரைகதையாசிரியருமான ஒருவரின் எதிர்வுகூறலுக்கு அமைய ஜப்பானை இன்று சுனாமி தாக்குமா? ஆசியாவில் பேரழிவு ஏற்படுமா என்று உலகம் அச்சத்தில் உறைந்திருக்கிறது.

இன்று ஜூலை 5 ஆம் திகதி ஜப்பானில் பாரிய பூகம்பம் ஏற்பட்டுச் சுனாமி உருவாகிப் பேரழிவு ஏற்படும் என்று கடந்த 2021இல் தனது வரைகதை (Manga-Comics) நூலாசிரியை றியோ டட்சுகி எதிர்வு கூறியிருக்கிறார்.

ஆனால். ஆரூடத்தை நம்ப வேண்டாம் என்றும் அதற்கு எந்தவித அறிவியல் ஆதாரமும் இல்லை என்றும் ஜப்பானிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இருப்பினும், ஜப்பானில் கடந்த சில வாரங்களாக – ஜூன் 21 முதல் – பல பகுதிகளிலும் சுமார் 900 நில நடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இந்தச் சூழலில் எப்படி நம்பாமல் இருப்பது என்று ஜப்பானிய மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

ஏனென்றால். றியோ டட்சுகி ஏற்கனவே கணித்தவாறு பல சம்பவங்கள் நிகழ்ந்து அவரது ஆரூடத்திற்கு வலு சேர்த்துள்ளன.

யார் இந்த றியோ டட்சுகி?

றியோ டட்சுகி ஒரு ஜப்பானிய மங்கா கலைஞர். மங்கா என்பது ஜப்பானிய வரைகதை வடிவம். அவர் “The Future As I See It” என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.

அவரது புத்தகத்தில், அவர் எதிர்காலத்தைப் பற்றிய தனது பார்வைகளைப் பகிர்ந்து கொள்கிறார். சிலர் அவரை ஜப்பானின் பாபா வங்கா என்றும் புதிய பாபா வங்கா என்றும் அழைக்கிறார்கள்.

பல்கேரியாவைச் சேர்ந்த தீர்க்கதரிசியான பெண் பாபா வங்கா என்று அழைக்கப்படுகிறார்.

அவர் 2025 மாத்திரமன்றி ஐயாயிரமாவது ஆண்டளவில் இந்த உலகம் அழிந்துவிடும். மனிதர்கள் இருக்கமாட்டார்கள் என்று கணித்திருக்கிறார்.

பாபா வங்கா 12 வயதில் கண்பார்வை இழந்தவர். அதன் பின்னர் அவர் எதிர்காலத்தைக் கணித்துச் சொல்லி வந்திருக்கிறார். அவர் சொன்ன கணிப்புகள் அப்படியே நடந்துள்ளன.

அவரைப்போலவே ஜப்பானின் புதிய பாபா வங்கா என்று அழைக்கப்படும் 70 வயது பெண் வரைகதையாசிரியர் 2021இல் எழுதி வெளியிட்ட நூலில் இன்று ஜூலை ஐந்தாம் திகதி பேரழிவு ஏற்படும் என்று கணித்திருக்கிறார்.

றியோ டட்சுகியின் கணிப்பின்படி 2025 ஜூலையில் ஜப்பானில் ஒரு பெரிய சுனாமி வரும் என்றும் இது ஒரு பேரழிவாக இருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

அவரது கணிப்புகள் பாபா வங்காவின் கணிப்புகளுடன் ஒப்பிடப்படுகின்றன, அதனால், சிலர் அவரை “புதிய பாபா வங்கா” என்று குறிப்பிடுகிறார்கள்.

சுனாமியினால் என்ன நடக்கும்?

ஜூலையில் வரவிருக்கும் சுனாமி, ஜப்பானுக்கு ஒரு பெரிய அச்சுறுத்தலாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதுவரை கண்டிராத ஒரு பெரிய சுனாமி இதுவாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இதன் காரணமாக மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

அவரது கணிப்பின்படி, ஜூலையில், (இன்று) ஜப்பானுக்கும் பிலிப்பைன்சுக்கும் இடையே, கடலுக்கடியில், ஒரு பெரிய விரிசல் உருவாக உள்ளதாகவும், அதன் காரணமாக இரு தட்டுகளில் உள்ள நாடுகளிலும் பேரழிவு ஏற்படும்.

இது, முன்னதாக 2011-இல் ஏற்பட்ட பேரழிவின்போது ஏற்பட்ட சுனாமி அலைகளைவிட மூன்று மடங்கு உயர சுனாமி அலைகளை ஏற்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடலுக்கடியில் எரிமலை வெடித்து இழப்புகளை மேலும் அதிகப்படுத்தும் என்றும், இந்தப் பேரழிவின் மையப்பகுதி, ஜப்பான், தாய்வான், இந்தோனேஷியா, வடக்கு மரியானா தீவுகளை இணைக்கும் வைர வடிவப் பகுதியாக இருக்கும்.

டட்சுகி, 1999ஆம் ஆண்டு, தனது “The Future I Saw“ அதாவது “நான் கண்ட எதிர்காலம்“ என்ற புத்தகத்தை வெளியிட்டு, அதன் மூலம் பலரது கவனத்தை ஈர்த்தார்.

2011இல் ஏற்பட்ட சுனாமி

பல ஆண்டுகளாக அவர் கணித்த தீர்க்க தரிசனங்களின் தொகுப்பாக அந்தப் புத்தம் இருந்தது. இது ஆரம்பத்தில் சிறிதளவே கவனத்தை பெற்றாலும், அவரது பல கணிப்புகள் உண்மையானதையடுத்து, ஜப்பானையும் தாண்டி அவரது புகழ் பரவியது.

அந்தப் புத்தகத்தின் மறுபதிப்பு சுமார் பத்து இலட்சம் பிரதிகள் வரை விற்பனையானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்தப் புத்தகத்தில், 2011ஆம் ஆண்டில் நடைபெற இருந்த டோஹோகு பூகம்பம், அதைத் தொடர்ந்து ஏற்படும் பேரழிவுகளைப் பற்றிக் கணித்திருந்தார்.

அதன் பின்னர், அவர் குறிப்பிட்ட அந்த மாதத்தில், பூகம்பம், சுனாமி ஏற்பட்டு, 18,000-இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தார்கள்.

இதைவிட, அவர் கணித்ததுபோல், ஜப்பானில் உள்ள ஃபுகுஷிமா அணு உலையில் கசிவு ஏற்பட, உலகமே அதிர்ச்சியில் உறைந்தது.

இப்படி அவர் கணித்த பல விடயங்கள் நடக்கத் தொடங்கியதால், மக்கள் அவரை நம்ப ஆரம்பித்தனர். அத்தோடு, சர்வதேச அளவில் அவரை ஜப்பானிய பாபா வங்கா என்றும், புதிய பாபா வங்கா என்றும் அழைக்கத் தொடங்கினர்.

இந்தப் புதிய பாபாவின் ஆரூடத்திற்குப் பயந்து மக்கள் பயணங்களை மட்டுப்படுத்தியுள்ளனர். விமானப் பயணப் பதிவுகள் வெகுவாகக் குறைந்துள்ளன.

டட்சுகியின் இந்தக் கணிப்பால், அந்த நேரத்தில் ஜப்பானுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டிருந்த சுற்றுலாப் பயணிகள் தங்களது பயணத்தை இரத்து செய்யத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

அத்தோடு, ஜப்பானில் உள்ள சீனர்கள் விழிப்புடன் இருக்குமாறு அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜப்பான் அரசு, விரிவான பேரிடர் மீட்புக்காக, உட்கட்டமைப்புகளை மேம்படுத்தி தயாராக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

எயார் இந்தியா விமான விபத்தும் ஓர் இதழில் வந்தது!

கடந்த ஜூன் 12 ஆம் திகதி அகமதாபாத்தில் நடந்த விமான விபத்தைச் சித்திரிக்கும் ஒரு காட்சியுடன் அன்று அகமதாபாத்தில் வெளியான ஒரு பத்திரிகையில் விளம்பரம் பிரசுரமாகியிருந்ததாக ஒரு தகவல் தெரிவித்தது.

எப்போதும் நேர்மறையாகச் சிந்திக்க வேண்டும். சொற்களைப் பயன்படுத்துவதும் மிகக் கவனமாக இருக்க வேண்டும். எதை நினைக்கிறோமோ அது நடக்கும் என்பது இப்போது மட்டுமல்ல, எப்போதும் நடந்தே வருகிறது.

விசு கருணாநிதி – மதிமுரசுவுக்காக

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025