இலண்டன் செல்லவிருந்த விமானம் இறுதி நேரத்தில் இரத்து

அகமதாபாத்தில் இருந்து இலண்டன் செல்லவிருந்த விமானம் இறுதி நேரத்தில் இரத்து செய்யப்பட்டது.
இலண்டன் புறப்படவிருந்த Al 159 ஏர் இந்தியா விமானம் தொழினுட்பக் கோளாறால் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
விமான விபத்துக்குப் பிறகு லண்டனுக்கு இயக்கப்படும் ஏர் இந்தியாவின் முதல் சேவையாக இது இருந்தது.
விமானம் அகமதாபாத்தில் இருந்து இலண்டனுக்கு மதியம் 1:10இற்குப் புறப்படத் திட்டமிடப்பட்டிருந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இறுதி நேரத்தில் விமானம் இரத்துச் செய்யப்பட்டதால் முன்பதிவு செய்திருந்த 200 பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.