மோதலைத் தவிர்க்குமாறு ஜி7 நாடுகள் கோரிக்கை

மோதலைத் தவிர்க்குமாறு ஜி7 நாடுகள் கோரிக்கை

ஜி7 மாநாடு 2025- படம் விக்கிபீடியா

இஸ்ரேல் – ஈரான் மோதலைத் தவிர்க்குமாறு ஜி7 நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன.

கனடாவில் கூடிய ஜி7 நாடுகளின் தலைவர்கள் கூட்டறிக்கை மூலம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர்.

அதேநேரம், மத்திய கிழக்குப் பதற்ற நிலையின்போது தன்னைத் தற்காத்துக்கொள்ளும் உரிமை இஸ்ரேலுக்கு உண்டென்றும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஈரான் அணுவாயுதத்தை வைத்திருக்க முடியாது என்றும் ஜி7 நாடுகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

தெஹ்ரானிலிருந்து அனைவரும் வெளியேற வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ள சமயத்தில் ஜி7 நாடுகளின் அறிக்கை வெளியாகி உள்ளது.

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025