விபத்திலிருந்து தப்பிய ஹஜ் யாத்திரிகர்கள் விமானம்!

விபத்திலிருந்து தப்பிய ஹஜ் யாத்திரிகர்கள் விமானம்!

கோப்புப் படம் - ஊடகம்

ஹஜ் யாத்திரிகர்கள் 250 பேருடன் பயணித்த சவூதி அரேபிய எயார்லைன்ஸ் விமானம் அவசரமாக, பாதுகாப்பாக லக்னோவில் தரையிறக்கப்பட்டுள்ளது.

தரையிறங்கும்போது விமானத்தின் சில்லுகளில் புகை கிளம்பியது கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், லேண்டிங் கியர் பகுதியில் புகை கிளம்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்வி 3112 ரக விமானம் சனிக்கிழமை இரவு ஜித்தாவிலிருந்து புறப்பட்டு நேற்றுக் காலை லக்னோவில் தரையிறங்கியபோது அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025