மின் கட்டணத்தை 15 வீதத்தால் அதிகரிக்க அனுமதி

மின் கட்டணத்தை 15 வீதத்தால் அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று பிற்பகல் இதற்கான அனுமதியை வழங்கியது.
2025 ஜூன் மாதத்திலிருந்து ஆறு மாத காலத்திற்கு மின் கட்டத்தை 18.3 வீதத்தால் அதிகரிக்க இலங்கை மின்சார சபை அனுமதி கோரியிருந்தது.
எனினும், 15 வீத அதிகரிப்புக்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி அளித்துள்ளது.
அதற்கமைய, இன்று (11) நள்ளிரவு முதல் இந்தப் புதிய அதிகரிப்பு அமலுக்கு வருகிறது.