சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு ஜூன் 25 வரை விளக்க மறியல்

சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு ஜூன் 25 வரை விளக்க மறியல் வழங்கப்பட்டுள்ளது.
அவருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்றுவரை விளக்க மறியல் வழங்கியிருந்தது. இன்று மீண்டும் 25 ஆம் திகதிவரை விளக்க மறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
முன்பு வெளியிடப்பட்ட செய்தி: 10-06-2025
சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு நாளைவரை விளக்க மறியல்
ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்காத கைதியை விடுதலை செய்தமை தொடர்பாகக் கைதுசெய்யப்பட்ட சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு நாளைவரை விளக்க மறியல் வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று விளக்க மறியல் உத்தரவை வழங்கியது.
அனுராதபுரம் சிறைச்சாலையில் இருந்த கைதி ஒருவரை, பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட கைதிகளுடன் சேர்த்து விடுதலை செய்து அதிகாரத் துஸ்பிரயோகம் செய்ததாக இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
