சிறைச்சாலை ஆணையாளரை பதவிநீக்க முடிவு

சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு நாளைவரை விளக்க மறியல்

ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் கைதிகள் விடுதலை செய்யப்பட்ட விவகாரமாக சிறைச்சாலை ஆணையாளரை பதவிநீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகர் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

எதிர்வரும் பொசன் பண்டியையை முன்னிட்டு கைதிகள் சிலருக்குப் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

எனினும், பொதுமன்னிப்புப் பட்டியலில் இல்லாத சில கைதிகளையும் சிறைச்சாலை நிர்வாகம் விடுதலை செய்திருப்பதாகப் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதி பரிந்துரைக்காதவர்கள் இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளமை பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளது.

எமது வட்சப் செனலில் இணையுங்கள்

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025