சந்திராணி பண்டாரவின் வழக்கு ஒத்திவைப்பு

மகளிர், சிறுவர் விவகார முன்னாள் அமைச்சர் திருமதி சந்திராணி பண்டாரவுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு இன்று (06) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரத்தைத் தாக்கல் செய்தது.

நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி விதிகளுக்கு முரணாக நியமனங்களை வழங்கி ஊழல் புரிந்ததாக திருமதி சந்திராணி மீது வழக்குத் தாக்கல செய்யப்பட்டுள்ளது.

உலர் வலய அபிவிருத்தி அமைச்சின் திட்டப்பணிப்பாளராக எஸ். எம். சந்திரசேனவை நியமித்தமை பிரதான குற்றச்சாட்டாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சந்திராணியின் கைவிரல் அடையாளத்தைப் பதிவு செய்ய உத்தரவிட்ட நீதிபதி ஆதித்ய பட்டபந்தி, அவரை பத்து இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் விடுவித்தார்.

(மதிமுரசு)

எமது வட்சப் செனலில் இணையுங்கள்