மூவாயிரம் வாகனங்களுடன் எரியும் கப்பல்

மூவாயிரம் வாகனங்களுடன் எரியும் கப்பல் ஒன்றை அதன் பணியாளர்கள் அலஸ்கா கடல் பகுதியில் கைவிட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

மெக்சிக்கோவிலிருந்து 800 மின்சார வாகனங்கள் உட்பட மூவாயிரம் வாகனங்களுடன் சென்ற கப்பல் திடீரெனத் தீப்பற்றியுள்ளது.

தீயைக் கட்டுப்படுத்த முடியாமல் கப்பலின் பணியாளர்கள் கப்பலைக் கைவிட்டுவிட்டதாக அசோஸியேட்டட் பிரஸ் செய்தி செய்தி வெளியிட்டுள்ளது.

22 மாலுமிகளுள் எவரும் காயமடைந்ததாக அறிவிக்கப்படவில்லை என்று அமெரிக்க கரையோரக் காவற்படையின் புகைப்படங்களையும் இலண்டனைத் தளமாகக் கொண்ட கப்பல் நிறுவனத்தின் அறிக்கையையும் ஆதாரமாகக் கொண்டு செய்தி வெளியாகியுள்ளது.

அசியேட்டட் பிரஸ்: தமிழில் ஜீவிதன்

எமது வட்சப் செனலில் இணையுங்கள்