ஆசிரியையின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு

வவுனிரயாவில் தலை துண்டிக்கப்பட்டுக் கொலைசெய்யப்பட்ட ஆசிரியையின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

வவுனியா நொச்சிக்குளம் – அனந்தர்புளியம்குளம் பகுதியில் கணவனால் கொலை செய்யப்பட்ட ஆசிரியை சுவர்ணலதாவின் உடல் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டு இறுதிக்கிரியை அவரது இல்லத்தில் முன்னெடுக்கப்படுள்ளது.

வவுனியாவில் தனது மனைவியின் கழுத்தை அறுத்து கையில் எடுத்துக்கொண்டு கணவன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பெர்ம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒப்படைக்கப்பட்ட உடல்

புளியங்குளம், நொச்சிக்குளம் – அனந்தர்புளியம்குளம் பகுதியை சேர்ந்த ஆரம்பப்பிரிவு பாடசாலை ஆசிரியை ஒருவரே கொல்லப்பட்டுள்ளார்.

நயினாமடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் ஆரம்பப்பிரிவு ஆசிரியையாக கடமையாற்றும் ரஜூட் சுவர்ணலதா (32) என்பவரே கொல்லப்பட்டுள்ளார்.

ஆசிரியையின் கணவரே கொலையைச் செய்துள்ளார். தவறான உறவு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றிருந்ததாக விசரணையில் தெரியவந்துள்ளது.

ஆசிரியை கர்ப்பமாக இருந்த நிலையில் கொலை செய்யப்பட்டிருந்தமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. சம்பவம் தொடர்பில் கணவனை கைது செய்த புளியங்குளம் பொலிஸ், மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகிறது.