கடவுள் தக்க பதிலடி கொடுக்கட்டும்

கர்மாவும் கடவுளும் பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கும் அவர்களின் ஆதரவாளர்களுக்கும் கடவுள் தக்க பதிலடி கொடுக்கட்டும் என்று பாடகி சின்மயி குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் நடைபெற்ற ‘தக் லைஃப்’ இசை வெளியீட்டு விழாவில், ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவான ‘முத்த மழை’ பாடலை சின்மயி பாடினார். ஆனால், இந்தப் பாடலை படத்தில் பாடியிருப்பது பாடகி தீ (Dhee).
பாடகி தீயின் குரலைவிட சின்மயின் குரல் ரசிகர்களை வெகுவாக ரசிக்க வைத்ததாக சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர்.
“இன்னும் 15 ஆண்டுகளில் பாடகி தீ, நூறு சின்மயி, நூறு ஸ்ரேயா கோஷலைத் தாண்டிச் செல்வார்,” என்று அண்மைய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், தாம் முன்வைத்த பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து தமது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் சின்மயி.
“கடந்த சில ஆண்டுகளாக மோசமான வார்த்தைகள், அவமானங்கள், துன்புறுத்தல்கள், பொய்யர், பாலியல் தொழிலாளி, அனுசரித்துப்போகும் பெண் எனப் பலவாறான விமர்சனங்களை எதிர்கொண்டேன்.
“அவை அனைத்தையும் ஒரே மூலமான கடவுளுக்கு அர்ப்பணிக்கிறேன். அதேபோல் தற்போது நான் பெற்றுவரும் ஆதரவுகளையும் பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கான ஆதரவையும் ஒரே மூலமான கடவுளுக்கு அர்ப்பணிக்கிறேன்,” என்று கோபத்துடன் குறிப்பிட்டுள்ளார் சின்மயி.
கர்மாவும் கடவுளும் பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கும் அவர்களின் ஆதரவாளர்களுக்கும் கடவுள் தக்க பதிலடி கொடுக்கட்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுபோன்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு தப்பிப் பிழைத்த அனைவரும் தற்போது தனக்குக் கிடைக்கும் ஆதரவைப் பெறட்டும் என்றும் உண்மை வெல்லட்டும் என்றும் சின்மயி மேலும் தெரிவித்துள்ளார்.
