கெஹலியவுக்கும் அவரது மகனுக்கும் பிணை

கெஹலியவுக்கும் அவரது மகனுக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, வரது மகன் ரமித் ரம்புக்வெல்ல ஆகியோரை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு, பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் ஆகியோர் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர், கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
