மலையக நட்சத்திரக் கலை இலக்கிய பேரவை பொதுக்கூட்டம்

மலையக நட்சத்திரக் கலை இலக்கிய பேரவை பொதுக்கூட்டம் புசல்லாவையில் ஜூன் முதலாம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
பேரவையின் தலைவர் மலையக வாசுதேவன் தலைமையில் காலை பத்து மணிக்குப் புசல்லாவையில் அமைந்துள்ள அமைப்பின் அலுவலகத்தில் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அதன் செயலாளர் மருதமுத்து நவநீதன் தெரிவித்தார்.
புதிய அங்கத்தவர்களை இணைத்தல், பாடசாலை மாணவர்களிடையே எழுத்தறிவு போட்டிகளை நடத்துதல், புதிய இளம் பாடகர்களுக்குக் களம் அமைத்துக் கொடுத்தல், பாரம்பரிய கலைகள், நாடகத்துறை வளர்ச்சிக்கான பங்களிப்பு உள்ளிட்ட விடயங்கள் பொதுக் கூட்டத்தில் ஆராயப்படுகின்றன..

பன்விலை ம. நவநீதன்