அபிராமி தமிழ் மொழித்தின போட்டிகள் ஒத்திவைப்பு

சீரற்ற கால நிலை காரணமாக நாளை 31.05.2025 சனிக்கிழமை அபிராமி த. ம. வித்தியாலயத்தில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வத்தேகம வலயத்தின்
தமிழ் மொழி தினப் போட்டிகள் அவசரமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
அபிராமி தமிழ் மொழித்தின போட்டிகள் ஒத்திவைப்பு பற்றிய தகவலை கல்விப்
பணிப்பாளர் மௌலவி ஹாசிம் தெரிவித்தார்.
சீரற்ற காலநிலை தொடர்ந்து நீடிப்பதால் மாணவர்கள் பங்குபற்றுவதிலும் ஆபத்தான சூழ்நிலையைத் தவிர்த்துக் கொள்வதற்குமாக இந்த அவசரத் தீர்மானம்
மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கல்விப் பணிப்பாளர், ஏற்பாட்டுக் குழுவினர் இணைந்து எடுத்த தீர்மானத்திற்கு
அமைய போட்கள் பிற்போடபட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை மாணவர்களுக்கும் சம்பந்தப்பட்டவர்களுக்கும் அறிவிக்குமாறு
தமிழ் மொழி தின ஏற்பாட்டுக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.
பன்விலை ம. நவநீதன்
