உப்புத் தொழிற்சாலைக்குத் திப்பெனச் சென்ற அமைச்சர்

உப்புத் தொழிற்சாலைக்குத் திப்பெனச் சென்ற அமைச்சர்

உப்புத் தொழிற்சாலைக்குத் திப்பெனச் சென்ற அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் அங்கு நிலவரத்தைக் கேட்டறிந்துகொண்டார்.

கடற்றொழில், நீரியல், கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், ஆனையிறவு உப்பு உற்பத்தி தொழிற்சாலைக்கு திடீர் கண்காணிப்பு விஜயம் ஒன்றைத் திடுதிப்பென நேற்று (29.05.2025) மேற்கொண்டார்.

தொழிற்சாலையை பார்வையிட்டதுடன், தொழிற்சாலையில் நிலவி வரும் குறைபாடுகள் தொடர்பில் முகாமையாளரிடம் கேட்டறிந்துகொண்டார்.

அதனை உடனடியாக தீர்க்கும் வகையிலும், தேவையான வசதிகளை செய்து கொடுக்கவும் கைத்தொழில், தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தியுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அங்குப் பணிபுரியும், அதிகாரிகள்,ஊழியர்கள், தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நிவர்த்திக்கு முகமாகத் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்தக் கலந்துரையாடலின் போது, தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ஜெ.ரஜீவன் உள்ளிட்ட தரப்பினர் கலந்துகொண்டனர்.

எமது வட்சப் செனலில் இணையுங்கள்

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025