பயங்கரவாத இலக்குகள் தாக்கி அழிப்பு

பயங்கரவாத இலக்குகள் தாக்கி அழிப்பு: பகல்ஹாம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா மேற்கொண்ட இராணுவ நடவடிக்கையில் பயங்கரவாதிகளின் இலக்குகள் தாக்கி அழிக்கப்பட்டுள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது.
இன்று அதிகாலை முப்படையினரும் மேற்கொண்ட தாக்குதல் முழு வெற்றியடைந்திருப்பதாகப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்துள்ளார்.
இந்தியாவின் தாக்குதலில் பயங்கரவாதத் தலைவர் உட்பட 70 பேர் கொல்லப்பட்டதாகத் தெவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதக் குழுவின் தலைவர் ஒருவரின் குடும்ப உறுப்பினர்கள் பத்துப்பேர் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
ராஜ்நாத் சிங் விளக்கம்:
பயங்கரவாத இலக்குகள் தாக்கி அழிப்பு பற்றி விளக்கம் அளித்த அமைச்சர் ராஜ்நாத் சிங், ஒபரேஷன் சிந்தூர் மூலமாக இந்தியா தன் ராணுவ பலத்தை காட்டியுள்ளது. நமது முப்படைகளும் ராணுவத்தினர் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர் என்றார்.
அப்பாவி மக்களை கொலை செயதவர்களைத்தான் ராணுவம் அழித்தது. ஒபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் இந்திய பாதுகாப்புப் படை வரலாறு படைத்துள்ளது. ஒபரேஷன் சிந்தூர் முழு வெற்றி அடைந்துள்ளது.
பயங்கரவாதிகளின் முகாம்களை துல்லியமாகத் தாக்கி அழித்துள்ளோம். இலக்கு எதுவாக இருந்ததோ அதைத் துல்லியமாகத் தாக்கி அழித்துள்ளோம்.
எங்கள் நடவடிக்கை மிகுந்த சிந்தனையுடன், திட்டமிடப்பட்ட முறையில் எடுக்கப்பட்டுள்ளது.
இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளித்து, தாக்குதல் நடத்திய வீரர்களுக்கு துணை நின்ற பிரதமர் மோடிக்கு நன்றி.
பிரதமர் மோடியின் தலைமையே இந்திய ராணுவம் துல்லியமாக பதில் தாக்குதல் நடத்த காரணம்.
பஹல்காமில் தாக்குதல் நடத்தியவர்கள் மீது பதில் தாக்குதல் நடத்த இந்திய ராணுவத்திற்கு முழு உரிமை உண்டு.
சிறப்பாக செயல்பட்ட ராணுவ வீரர்களுக்கு சல்யூட். இந்திய வீரர்கள் தங்களது முழு தீரத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.
அசோக வனத்தை அழிக்கும்போது அனுமன் பின்பற்றிய லட்சியத்தை நாங்கள் பின்பற்றுகிறோம்.
நமது படைகளில் துணிச்சலுக்கு மீண்டும் ஒருமுறை தலை வணங்குகிறேன்.
இன்று தொடங்கிவைக்கப்படும் திட்டங்கள் நாட்டின் எல்லையை வலுப்படுத்தும் வகையில் இருக்கும்.
இந்த திட்டங்களால் நாடு வளர்ச்சி பாதையில் பயணிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

பயங்கரவாத இலக்குகள் தாக்கி அழிப்புக்கு எதிர்க் கட்சிகள், பிரபலங்கள் பாராட்டு
இந்தியா மேற்கொண்டுள்ள தாக்குதல் நடவடிக்கையை இந்திய எதிர்க் கட்சிகள் வரவேற்றுள்ளன.
அரசியல் கட்சிகளின் தலைவர்கள், மாநிலங்களின் முதலமைச்சர்கள் உள்ளிட்டோரும் வரவேற்றுப் பாராட்டியுள்ளனர்.
பயங்கரவாதத்திற்கு எதிராக இந்திய இராணுவத்துடன் கைகோத்திருப்பதாகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நாடெங்கிலும் மக்கள் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் பட்டாசுகள் கொளுத்தி இந்திய இராணுவத்திற்குப் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
நடிகர் ரஜினிகாந்த், இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் முதலானோரும் இந்திய இராணுவத்திற்குப் பாராட்டு தெரிவித்துள்ளனர்.