தீபாவளித் திருநாளுக்கு மறுதினமான ஒன்பதாம் திகதி திங்கட்கிழமை சபரகமுவை மாகணத்திலுள்ள தமிழ்ப் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக சபரகமுவை மாகாண கல்வி அமைச்சு உத்தியோகப் பூர்வமாக அறிவித்துள்ளது.
பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பின் வேண்டுகோளுக்கமைய சபரகமுவை மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு இந்த விசேட விடுமுறை வழங்கப்பட்டது. இதற்குப் பதிலாக 2026/11/14 சனிக்கிழமை பாடசாலை நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதேவேளை, 9 ஆம் திகதி நடத்தப்படவிருந்த மூன்றாம் தவணைப்பரீட்சை 14 ஆம் திகதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்.ஆர்.இரவீந்திரன்
