நேபாளத்தில் எவரெஸ்ட் மலை அடிவாரத்தில் இரு ஹெலிகாப்டர்கள் மோதி செவ்வாய்க்கிழமை விபத்துக்குள்ளாகின்.
இந்த ஹெலிகாப்டரில் விபத்தில் பலியானவர் இந்திய சுற்றுலாப் பயணி என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் சென்னையைச் சேர்ந்த செல்வகுமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
எவரெஸ்ட் சிகரப் பகுதியில் உள்ள பெரிச்சே என்ற இடத்தில் இன்று காலை 8 மணியளவில் தரையிறங்க முயன்ற ஃபிஷ் டெயில் ஏர் மற்றும் டைனாஸ்டி ஏர் ஆகிய இரு தனியார் நிறுவனங்களின் ஹெலிகாப்டர்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஃபிஷ்டெயில் ஏர் ஹெலிகாப்டரில் பயணித்த வெளிநாட்டுப் பயணி உயிரிழந்தார். இரு ஹெலிகாப்டர்களின் கேப்டன்களான கே.சி. பிரஜ்வல், ரவீந்திர பிரஜாபதி, நியூசிலாந்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளி ஒருவர் என மூவர் காயமடைந்துள்ளார்.
உயிரிழந்த வெளிநாட்டுப் பயணி, இந்தியாவைச் சேர்ந்த வசந்தகுமார் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. அவரின் உடல் லுக்லாவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
மேலும், சம்பவ இடத்துக்கு விரைந்த சிம்ரிக் ஏர் ஹெலிகாப்டர் மூலம் மீட்புப் பணிகள் நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
