பின்தங்கிய பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தை கட்டி எழுப்ப அரசாங்கத்தினால் தொடர்ச்சியாக வாழ்வாதார உதவித் திட்டங்கள் வழங்கல்
மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சமுர்த்தி திட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கும் நிகழ்ச்சி, நேற்று 02.11.2026 பிற்பகல் பிரதேச செயலாளர் திருமதி என்.சத்தியானந்தி தலைமையில் சமுர்த்தி வங்கி கட்டட அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு கலந்து கொண்டு தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான வாழ்வார உதவிகளை வழங்கினார்.
இதற்காக பாராளுமன்ற உறுப்பினரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து மூன்று மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விவசாய உபகரணங்கள் செங்கல் அறுக்கும் இயந்திரம் வியாபார உபகரணங்கள் இங்கு வழங்கப்பட்டன
மண்முனை மேற்கு சமுர்த்தி வங்கி சங்க தலைமையக முகாமையாளர் கே. தங்கதுரை வங்கியின் ஊழியர்கள், பயனாளிகள், பொதுமக்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்
கடந்த பத்து வருடங்களாகத் துவிச்சக்கர வண்டியில் வியாபாரம் மேற்கொண்ட ஒரு பயனாளிக்கு 3 லட்சம் ரூபாய் பெறுமதியான புதிய மோட்டார் சைக்கிள் ஒன்று வழங்கப்பட்டது.
எஸ்.வரதராஜன்



