புலனாய்வுப் பிரிவு கொன்ஸ்டபிள் கைது

புலனாய்வுப் பிரிவு கொன்ஸ்டபிள் கைது

புலனாய்வுப் பிரிவு கொன்ஸ்டபிள் கைது: தேசிய புலனாய்வு சேவை பிரிவில் பணியாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர், தேசிய புலனாய்வு சேவை பிரிவுடன் இணைக்கப்பட்ட கரடியனாறு புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த கான்ஸ்டபிள் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

2018 ஆம் ஆண்டு வவுணதீவு காவல் நிலையத்தில் பணியாற்றிய இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் சந்தேக நபரான இந்த கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர் இந்தக்புலனா கொலைகள் தொடர்பில் பிழையான தகவல்களை வழங்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முன்னெடுத்துள்ளது.

மர்வின் சில்வாவுக்கு மீண்டும் விளக்கமறியல்

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025