October 23, 2026 11:35 pm
உளநல விழிப்புணர்வை ஏற்படுத்திய சம்மாந்துறை வைத்தியசாலை நிகழ்ச்சி

உலக உளநல தினத்தையொட்டி சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் ‘அன்பகம்’ உளநலப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று (22) நடைபெற்றது.

உளநல விழிப்புணர்வை ஏற்படுத்திய சம்மாந்துறை வைத்தியசாலை நிகழ்ச்சி

வைத்திய அத்தியட்சகர் டாக்டர் டி. பிரபாஷங்கர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சகிலாராணி இஸ்ஸடின் உள்ளிட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

விழிப்புணர்வு நடைபவனி, மாணவர்களின் வீதி நாடகம்,உளநல சிகிச்சையில் முன்னேற்றம் கண்ட இரு நோயாளர்களின் அனுபவப் பகிர்வு ஆகியன இடம்பெற்றன.

உளநலப் பிரச்சினைகள் தொடர்பான சமூக விழிப்புணர்வை அதிகரித்தல், பாதிக்கப்பட்டவர்களை ஏற்றுக்கொண்டு ஆதரவளித்தல்,உரிய சிகிச்சையை ஊக்குவித்தல் ஆகியவற்றின் அவசியம் வலியுறுத்தப்பட்டது.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நினைவுச் சின்னங்களும் சான்றிதழ்களும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

சம்மாந்துறை ஜலீல்