October 23, 2026 2:00 pm
மட்டக்களப்பில் மாணவர்களுக்கான ஊடகப் பயிற்சிப் பட்டறை

சுகாதார,ஊடக அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ், அரசாங்க தகவல் திணைக்களம் நடத்தும் பாடசாலை மாணவர்களுக்கான வெகுசன ஊடக அறிவை விருத்தி செய்தல் என்னும் திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்திற்கான முதலாவது ஒரு நாள் பயிற்சி பட்டறை இன்று (23)மட்டக்களப்பில் நடைபெற்றது

மட்டக்களப்பில் மாணவர்களுக்கான ஊடகப் பயிற்சிப் பட்டறை

மாணவர்கள் மத்தியில் சமூக ஊடக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடன் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் தலைமையில் இன்று மட்டக்களப்பு மகாஜன கல்லூரியில் இந்தப் பயிற்சிப்பட்டறை நடைபெற்றது.

மாவட்ட செயலகத்தின் தகவல் கல்வி திணைக்களத்தின் உயர் அதிகாரிகள், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஐந்து கல்வி வலயங்களிலும் இருந்து தெரிவு செய்யப்பட்ட 300க்கும் மேற்பட்ட மாணவர்கள், பாடசாலையின் அதிபர்கள், ஆசிரியர்கள் இன்றைய இந்தப் பயிற்சி நெறியில் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பில் மாணவர்களுக்கான ஊடகப் பயிற்சிப் பட்டறை

மாணவர்கள் சமூக ஊடகங்களை எவ்வாறு பாதுகாப்பான முறையில் கையாளுவது பற்றியும் ஊடக ஒழுக்க நெறி, உண்மைத்தன்மை, பதிப்புரிமை, டிஜிட்டல் ஊடக கட்டமைப்பின் ஒழுக்க நெறி எனப் பலதரப்பட்ட விடயங்கள் மாணவர்களுக்கு விளக்கப்பட்டது.

எஸ்.வரதராஜன், மட்டக்களப்பு