October 22, 2026 11:04 am
இன்று முதல் மின் துண்டிப்பு அவசியம் இல்லை: என்எஸ்ஓ

நுரைச்சோலை லக்விஜய அனல் மின்னுற்பத்தி நிலையம் இன்று (22) முதல் வழமைக்குத் திரும்புவதால், மின்வெட்டு அவசியமிராதெனத் தேசிய முறைமை செயற்பாட்டு நிறுவகம் (என்எஸ்ஓ) தெரிவித்துள்ளது.

தேசிய மின்சாரக் கட்டமைப்பில் ஏற்பட்ட சமநிலையற்ற தன்மை காரணமாக, கடந்த 17 ஆம் திகதி நாடு முழுவதும் மின்சாரத் தடை ஏற்பட்டது. அதனால், நேற்று (21) வரை நாடளாவிய ரீதியில் ஒரு மணித்தியாலம் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது.

லக்விஜய மின் நிலையம் தேசிய மின்சாரக்கட்டமைப்புடன் இன்று 922) மதல் இணைக்கப்படுவதால், மின் துண்டிப்பு அவசியம் இல்லையெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பின்னணியில் மின்சாரப் பாவனையாளர் சங்கம், ஒக்டோபர் 17 ஆம் திகதி நாடு முழுவதும் மின்சாரத் தடை ஏற்பட்டமை குறித்து விரிவான விசாரணையொன்றை நடத்துமாறு, தேசிய பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்குக் கடிதம் எழுதியுள்ளது.