October 21, 2026 5:26 pm
அரச உயர் அதிகாரிகளுக்கான விழிப்புணர்வும் பயிற்சியும்

பிரஜா சக்தி தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் உயர் அதிகாரிகளுக்கான இணையவழி முகாமைத்துவ தகவல் முறைமையில் தரவுகளைப் பதிவு செய்வது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் தலைமையில் பழைய மாட்ட செயலகத்தில் இன்று (21) நடைபெற்றது.

கிராமிய அபிவிருத்தி சமூக பாதுகாப்பு அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் எச்.எம்.எம். ரூவைத்,உதவிப் பணிப்பாளர் யோகநாதன் ஆகியோரின் பங்கேற்புடன் நடைபெற்றது.

இவ்வேலைத்திட்டத்தின் கீழ் சமூக அபிவிருத்திச் சபைகள் ஊடாக அடையாளம் காணப்படும் மக்களின் தேவைகள்,கிராமிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான தகவல்களை, இணையவழித் தகவல் முறைமையில் பதிவுசெய்வதற்கும் அதிகாரிகளின் திறன்களை மேம்படுத்துவதுவதற்குமான பயிற்சிகளை, ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் சாரதாஞ்சலி மனோகரன் வழங்கினார்.

கிராமிய வறுமையை ஒழித்து சமூகங்களின் பொருளாதார,சமூக வலுவூட்டலை மேம்படுத்தும் நோக்கில் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் பிரஜா சக்தி தேசிய வேலைத்திட்டத்தினை வலுப்படுத்தும் முகமாக இப்பயிற்சி நடை பெற்றது.

தகவல்களைத் துல்லியமாகப் பதிவுசெய்தல், அபிவிருத்தித் திட்டங்களைத் திட்டமிடுதல் அவற்றின் முன்னேற்றத்தைக் கண்காணித்தல் ஆகியவற்றின் ஊடாக மக்களின் பங்கேற்புடன் விளைதிறனான கிராமிய அபிவிருத்தியை முன்னெடுப்பதற்கு இத்தகைய பயிற்சிகள் பங்களிப்பு செய்கின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரஜா சக்தி தேசிய வேலைத்திட்டத்தின் ஊடாக கிராமிய வறுமையைக் குறைத்து, மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான பல செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

தேசிய ரீதியில் சனாதிபதி செயலகத்தினால் பிரஜா சக்தி வேலைத் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அதிகளவான திட்டங்கள் ஒதுக்கப்பட்டன்.

அவற்றில் அதிகளவான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டமை குறித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

மட்டக்களப்பு எஸ்.வரதராஜன்