October 19, 2026 8:59 am
லிட்ரோ காஸ் விலை நிள்ளிரவு முதல் குறைகிறது

லிட்ரோ காஸ் விநியோகத்தில் தற்போது நிலவும் மந்தமான நிலை, ஓரிரு நாளில் சீராகிவிடும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் காஸுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக வெளியாகும் செய்தியை மறுத்துள்ள லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன, காஸ் கப்பல் வருவதில் இரண்டு நாள் தாமதமானதால் விநியோகத்தில் சற்று மந்த நிலை ஏற்பட்டதாக் கூறியுள்ளார்.

ஸ் சிலிண்டர்கள் தற்போது சந்தைக்கு வந்துகொண்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ள குணவர்தன, விரைவில் நிலைமை வழமைக்குத் திரும்பும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.