மேல், சபரகமுவை, மத்திய, ஊவா,தென் மாகாணங்களின் சில பகுதிகளுக்கு 100 முதல் 150 மில்லிமீற்றர் வரையான கடும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று (13) காலை 10.30 இற்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அறிவிப்பு, இன்று மாலை 6.30 முதல் நாளை (14) மாலை 6.30 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையை அண்மித்த வங்காள விரிகுடா கடற்பரப்பில் கீழ் வளிமண்டலத்தில் நிலவும் குழப்பமான வானிலை நிலைமை காரணமாக, நாடு முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
குறிப்பாக, மேல், சபரகமுவை, மத்திய, ஊவா,தென் மாகாணங்களின் சில இடங்களில் 100 முதல் 150 மில்லிமீற்றர் வரையான பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எஸ்.ஆர்.இரவீந்திரன்
