விமல் வீரவன்ச மீது விசாரணை ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கு அமைய, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபட்டுள்ளாரா என்பது தொடர்பில் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் (CCIB) விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த செப்டம்பர் 12 ஆம் திகதி அநுராதபுரத்தில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) மக்கள் பேரணியில் அவர் வெளியிட்ட கருத்துகள் மூலம் நீதிமன்றத்தை அவமதித்துள்ளாரா என்பது குறித்தே இந்த விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
