பெட்ரோல் விலை குறைந்தாலும் ஓட்டோ கட்டணம் குறையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒக்டேன் 92 ரக பெட்ரோல் விலை 15 ரூபாயால் குறைக்கப்பட்ட போதிலும், முச்சக்கர வண்டி கட்டணங்களில் எந்த மாற்றமும் ஏற்படாது எனத் தேசிய ஒருங்கிணைந்த முச்சக்கர வண்டி சாரதிகள்,தொழில்முனைவோர் சங்கம் கண்டிப்பாகத் தெரிவித்துள்ளது.
புதிய கட்டணத் திருத்தம் அமுலுக்கு வரும் வரை, முதலாவது கிலோ மீற்றருக்கு 110 ரூபாயும், இரண்டாவது கிலோமீற்றரிலிருந்து 90 ரூபாயும் என்ற பழைய கட்டண முறையே தொடரும் எனச் சங்கத்தின் பொதுச் செயலாளர் எல். ரோஹண பெரேரா உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
முச்சக்கர வண்டி கட்டணங்களை முறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், புதிய கட்டணங்கள் சட்டமாக்கப்படும் வரை தற்போதைய கட்டண முறையே நடைமுறையில் இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
