சாவகச்சேரியில் கல்விக் கூட்டுறவுச் சங்க அலுவலகம்

இலங்கையில் கல்வித்துறை ஊழியர்களின் நலன்களை முன்னிறுத்தி செயற்பட்டு வரும் கல்விக் கூட்டுறவுச் சங்கத்தின் (Education Co-operative Society – EDCS) புதிய அலுவலகம் இன்று (29) சாவகச்சேரியில் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.

இது இலங்கையில் திறக்கப்பட்டுள்ள 26ஆவது கல்விக் கூட்டுறவுச் சங்க அலுவலகமாகவும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களுக்கான பிராந்திய அலுவலகமாகவும் அமைந்துள்ளது.

சாவகச்சேரியில் நடைபெற்ற அலுவலகத் திறப்பு நிகழ்வில் மீன்பிடி அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் ஜெகதீஸ்வரன், கல்விக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் எம்.ஜீ. லால்குமார்,பொது முகாமையாளர் சந்தன குணசேகர ஆகியோர் கலந்து கொண்டு அலுவலகத்தைத் திறந்து வைத்தனர்.

க.கிஷாந்தன்