study-graduation-academic-dress-scholar-mortarboard-event-1626645-pxhere.com_-8

வட்டியில்லா மாணவர் கடனுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

உயர் கல்விக்கான வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் 11 ஆம் (2026/2027) கட்டத்திற்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளன.

உரிய விண்ணப்பங்களை வரும் செப்டெம்பர் மாதம் 27 ஆம் திகதி வரை சமர்ப்பிக்க முடியும்.

இதற்கான அடிப்படைத் தகுதிகளாக 2023, 2024,2025 ஆகிய ஆண்டுகளில் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி, குறைந்தபட்சம் மூன்று பாடங்களிலும் சாதாரண சித்தி (S) பெற்றிருக்க வேண்டும்.

மேலும் க.பொ.த உயர்தர அல்லது க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் ஆங்கிலப் பாடத்தில் குறைந்தபட்சம் சாதாரண சித்தி (S) பெற்றிருக்க வேண்டும்.

பொதுச் சாதாரண பரீட்சையில் (Common General Test) குறைந்தபட்சம் 30 புள்ளிகள் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் கோரப்படும் இறுதித் திகதியன்று (2026.09.27) வயது 25இற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

இத்திட்டத்தின் மூலம் பொறியியல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம், அறிவியல், வணிகம், மனிதநேயம் – கலை ஆகிய பாடப் பிரிவுகளின் கீழ், பட்டங்களை வழங்கும் 16 நிறுவனங்கள் ஊடாக, 129இற்கும் மேற்பட்ட பட்டப்படிப்பு பாடநெறிகளைப் பயில்வதற்கு மாணவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

எஸ். ஆர். இரவீந்திரன்