22ஆவது திருத்தச் சட்டமூலம் 18ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது.
நீதியரசர்கள், நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பதற்கான அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் 18ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணாயக்கார தெரிவித்துள்ளார்.
அன்றைய நாளிலே நீதிமன்ற ஏற்பாடுகள் திருத்தச் சட்டமூலமும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு ஆரம்பமுதலே மகாநாயக்க தேரர்கள், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், எதிர்க்கட்சிகள்,சில சர்வதேச அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், 22ஆவது திருத்தச் சட்டமூலம் கடந்த 7ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.
சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், அதனை உச்ச நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்த அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கு அமைய 14 நாள் கால அவகாசம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
