மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச சபை புதிய செயலாளர் பதவியேற்பு

போரதீவுப்பற்று பிரதேச சபை புதிய செயலாளராக சண்முகராஜா விஜிதராஜா கடமையேற்றார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச சபையின் செயலாளராக சண்முகராஜா விஜிதராஜா நேற்று 03.07.2026 உத்தியோகபூர்வமாகத் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

​அவரது பதவி உயர்வு ,கடமையேற்பை முன்னிட்டு, பிரதேச சபை வளாகத்தில் விசேட வரவேற்பு நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

​புதிதாக போரதீவுப்பற்று பிரதேச சபை செயலாளர் பதவியேற்ற நிகழ்வில், பிரதேச சபையின் தவிசாளர் விமலநாதன் மதிமேனன் முன்னிலையில், தினவரவு டாப்பில் கையொப்பம் இட்டுத் தனது கடமையினைப் பொறுப்பேற்றார்.

​இந்த நிகழ்வின் போது பிரதேச சபையின் முன்னாள் பதில் செயலாளர் எஸ்.பகீரதன், சபையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

​புதிய செயலாளருக்குப் பொன்னாடை போர்த்தி, மலர்மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டதோடு, அவர் தனது புதிய பதவியில் திறம்படச் செயலாற்ற சபையின் தவிசாளர், உத்தியோகஸ்தர்கள் தங்களது மனமார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.

எஸ். வரதராஜன்

புதுப்பாலத்தின் புனரமைப்பு பணிகள் பிரபு எம்பியால் ஆரம்பித்துவைப்பு