மட்டக்களப்பு நகர் தனியார் வங்கி கிளையில் தீ விபத்து!

மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள தனியார் வங்கி கிளையில் இன்று (30) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.

மட்டக்களப்பு புகையிரத வீதி சந்தியில் ​வங்கி வளாகத்தில் இருந்து திடீரென கரும்புகையும் தீப்பிழம்பும் வெளிவருவதைக் கண்ட பிரதேசவாசிகள் உடனடியாக இது குறித்து தீயணைப்புப் பிரிவினருக்கும் பொலிஸாருக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.

​தகவலறிந்த மட்டக்களப்பு மாநகர சபையின் தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கடுமையான போராட்டத்திற்கு மத்தியில் தீயை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்

அதிகாலை நேரம் என்பதால் வங்கியில் ஊழியர்களோ வாடிக்கையாளர்களோ இல்லாததால் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

​மின்சார ஒழுக்கு காரணமாகவே இந்தத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகளில் சந்தேகிக்கப்படுகிறது.
எஸ். வரதராஜன்