கந்தசாமி பிரபு கலந்து கொண்ட வெசாக் தன்சல நிகழ்ச்சி

பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு கலந்து கொண்ட வெசாக் தன்சல நிகழ்ச்சி

வெசாக் வாரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.

இனங்களிடையே ஐக்கியத்தையும் சகவாழ்வையும் ஏற்படுத்தும் வகையில் மட்டக்களப்பு கல்லடி திருச்செந்தூர் ஓங்காரானந்த முன்பள்ளியின் ஏற்பாட்டில் வெசாக் விழா நடத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு கலந்துகொண்டு சிறப்பித்தார்.

இந்த நிகழ்வில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டதுடன் கலந்துகொண்டவர்களுக்கு தாகசாந்தியும் அன்னதானமும் வழங்கப்பட்டது.
எஸ். வரதராஜன்