பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை

தற்போது நிலவும் மழை நிலைமை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்பிரகமுவை,வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

அடுத்த 36 மணித்தியாலத்திற்கு இந்த முன்னறிவித்தல் செல்லுபடியாகும்.

பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு ஊவா மாகாணம், அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் .

மத்திய மேற்குத் தொடர்ச்சி மலைச் சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல், தென் மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.