தமிழக முதலமைச்சர் விஜய்யின் அரசு மீது மேற்கொள்ளப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் 144 வாக்குகளைப் பெற்று தவெக அரசு வெற்றி பெற்றது.
தமிழக சட்டப்பேரவையில் மே 13ஆம் தேதிக்குள் முதல்வா் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தார்.
அதன் அடிப்படையில், இன்று காலை முதல்வா் ஜோசப் விஜய் தலைமையிலான அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு முன்மொழியப்பட்டது.
சட்டப்பேரவை உறுப்பினர்களின் உரையைத் தொடர்ந்து கதவுகள் அனைத்தும் அடைக்கப்பட்டு பகுதிவாரியாக ஆறு பிரிவுகளில் அமர்ந்துள்ள எம்.எல்.ஏ.க்களின் வாக்குகள் கணக்கெடுப்பட்டது.
முதல்வர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசுக்கு ஆதரவாக 144 வாக்குகளும், எதிராக 22 வாக்குகளும் பதிவாகின.
நடுநிலை வகிப்பதாக 5 வாக்குகள் பதிவாகின. இதனைத் தொடர்ந்து, நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசு வெற்றி பெற்றதாக சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவித்தார்.
இதில், திமுக எம்.எல்.ஏ.க்கள் 57 பேரும் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் வெளிநடப்பு செய்தனர். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மதிமுகவின் 2 உறுப்பினர்கள் அவைக்கு வரவில்லை.
தமிழக வெற்றிக் கழகம் – 105 (மொத்தம் வெற்றி 108 – இதில், சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர், திருச்சி கிழக்கில் முதல்வர் விஜய் ராஜிநாமா, திருப்பத்தூர் எம்.எல்.ஏ. சீனிவாச சேதுபதிக்கு உயர் நீதிமன்றம் தடை)
காங்கிரஸ் – 5
இந்திய கம்யூனிஸ்ட் – 2
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் – 2
விடுதலை சிறுத்தைகள் – 2
இந்திய முஸ்லிம் லீக் – 2
மன்னார்குடி எம்.எல்.ஏ. காமராஜ் – 1
அதிமுக (சி.வி. சண்முகம் அணி) – 25
மொத்தம் – 144 எதிர்த்தவர்கள் – 22 (எடப்பாடி பழனிசாமி தரப்பு)
நடுநிலை – 5 (பாமக – 4, பாஜக – 1)
