பேராசிரியர் எம். எஸ். மூக்கையா திருச்சியில் காலமானார்!

புகழ்பெற்ற புவியியல் துறை பேராசிரியர் எம். எஸ். மூக்கையா இன்று (12) செவ்வாய்க்கிழமை தமிழ்நாடு திருச்சியில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.

இலங்கையிலும் சர்வதேச கல்விப்புலத்திலும் முக்கிய ஆளுமையாகத் திகழ்ந்த பேராசிரியர் மூக்கையா, புவியியல் துறை, உயர் கல்வித்துறையில் ஆற்றிய பங்களிப்புகள் அளப்பரியவை.

சமூக மாற்றத்திற்கான புரட்சிகர சிந்தனைகொண்ட பேராசிரியர் மூக்கையா, ஒரு தடவை நுவரெலியாவில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் செயலமர்வின்போது மலையகத்திலிருந்து அதுவும் தோட்டங்களிலிருந்து இளையோர் வெளியேறிச் சென்று வாழ்வது தோட்டங்களுக்கு ஆபத்தானது என்று குறிப்பிட்டார்.

அவர்கள் தோட்டத்திலிருந்தே முன்னேறி வெடித்து வெளிவர வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.