எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி

திமுக சட்டப்பேரவைக் குழு தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதன்மூலம் எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி.

மு.க. ஸ்டாலின் தலைமையில் மே 7 ஆம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவை உறுப்பினர்கள் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திமுக இன்று (மே 10) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.

”சட்டப் பேரவை உறுப்பினர்கள் கூட்டம் 07-05-2026 மாலை 5.30 மணியளவில் சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது.

அக்கூட்டத்தில் தி.மு.க. சட்டமன்றக் கட்சியின் தலைவராக உதயநிதி ஸ்டாலின், துணைத் தலைவராக கே.என்.நேரு, கொறடாவாக எ.வ.வேலு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்” என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.