யாழ்ப்பாணம் – கோப்பாய் சந்திக்கும் பிரதேச செயலகத்திற்கும் இடையில் நேற்று (4) நள்ளிரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்தனர்.
அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீடு ஒன்றின் மதிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
அந்த இளைஞர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கிப் பயணித்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
சம்பவத்தில் கரவெட்டி வடக்கைச் சேர்ந்த 22, 24 வயதுடைய இருவரே உயிரிழந்தனர்.
இந்த விபத்து தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
