அதிரடிப் படையினரின் வாகனம் ரயிலுடன் மோதி விபத்து- நால்வர் காயம்

பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் பயணித்த வாகனம் வெலிகமை, மிதிகமை பிரதேசத்திலுள்ள ரயில் கடவையொன்றில், ரயிலுடன் மோதி விபத்திற்குள்ளாகி நால்வர் படுகாயமடைந்துள்ளனர். இதில் இருவரின் நிலை ஆபத்தானதாக உள்ளதென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலியிலிருந்து மாத்தறை நோக்கிப் பயணித்த ரயிலுடனேயேஜீப் ரக வாகனம் இவ்வாறு மோதியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் நால்வர் காயமடைந்து மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மிதிகமை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.