பாகிஸ்தானுடனான டெஸ்ட் போட்டி: வலுவான நிலையில் இலங்கை

பாகிஸ்தானுடனான டெஸ்ட் போட்டியில் வலுவான நிலையில் இலங்கை அணி இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கை – பாகிஸ்தான் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில், முதல் இன்னிங்சில் விளையாடி வரும் இலங்கை அணி 4 விக்கெட்டுகளை இழந்து 404 ஓட்டங்களைக் பெற்றுள்ளது.

இதற்கமைய, இலங்கை அணி, பாகிஸ்தானின் முதல் இன்னிங்ஸ் ஓட்ட எண்ணிக்கையை (434/9)யை விட வெறும் 30 ஓட்டங்கள் மட்டுமே பின் தங்கியுள்ளது.

களத்தில் தனஞ்சய டி சில்வா 167 ஓட்டங்களையும்,கெப்டன் குசல் மெண்டிஸ் 117 ஓட்டங்களையும் பெற்றுள்ளனர்.

60 ஓவர்களுக்கு மேல் ஆடுகளத்தில் நிலைத்திருக்கும் இவர்கள் இருவரும், தற்போது 5 ஆவது விக்கெட்டுக்காக 249 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுள்ளனர்.

வெளிச்சம் குறைவானதால போட்டி நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு முன்னதாகவே முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

தனஞ்சய டி சில்வாவின் 14 ஆவது டெஸ்ட் சதம்

ராவல்பிண்டியில் நடைபெறும் இலங்கை – பாகிஸ்தானுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தனஞ்சய டி சில்வா தனது 14 ஆவது டெஸ்ட் சதத்தைப் பூர்த்தி செய்துள்ளார்.

148 பந்துகளில் பெறப்பட்ட தனஞ்சயவின் இந்த இன்னிங்ஸில் 14 நான்கு ஓட்டங்கள் அடங்கும்.

அவர் சதத்தைப் பூர்த்தி செய்த போது, இலங்கை அணி 69.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 249 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இதற்கமைய, பாகிஸ்தான் அணி தனது முதலாவது இன்னிங்ஸில் பெற்ற 434/9 எனும் ஓட்ட எண்ணிக்கையை விட இலங்கை அணி 185 ஓட்டங்கள் பின்னிலையில் உள்ளது.

தனஞ்சயவுடன் ஆட்டமிழக்காமல் களத்திலிருக்கும் கெப்டன் குசல் மெண்டிஸ் 31 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.