அரச ஊழியர்களின் சம்பள உயர்வுக்காக 110 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வரவு செலவு திட்ட உரையில் குறிப்பிட்டுள்ளார்.
162,500 ரூபாய் வரை சம்பளம் பெறுவொருக்கு வரி விலக்கு அளிக்கப்படுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
உழைக்கும் போது செலுத்தும் வரி வரம்பை 162,500 ரூபாவாக உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
2025 ஆம் ஆண்டின் எமது முதலாவது வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் அரச துறையின் குறைந்தபட்ச அடிப்படைச் சம்பளத்தை ரூபா 15,750 இனால் அதிகரித்ததன் மூலமும் வருடாந்த சம்பள ஏற்றத்தின் பெறுமதியை 80% வரை அதிகரித்ததன் மூலமும் அடிப்படைச் சம்பளத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த சம்பளத்தை அதிகரிப்பதற்கு ரூபாய் 330 பில்லியன் செலவாகின்றது.
இந்த சம்பளத் திருத்தம் 3 கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்பட்ட அதேவேளை, அதன் இறுதிக் கட்டம் 2027 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்படுவதுடன் அதற்காக வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் ரூபாய் 110 பில்லியன் ஒதுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
162,500 ரூபா வரை சம்பளம் பெறுவொருக்கு வரி விலக்கு
.உழைக்கும் போது செலுத்தும் வரி வரம்பை 162,500 ரூபாவாக உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
வரி செலுத்துநர்களுக்கு மேலும் நிவாரணத்தை வழங்குவதற்கான தனிப்பட்ட வருமான வரி நிவாரணத்தை மேலும் அதிகரிப்பதற்கும் வரிவிதிக்கத்தக்க வருமான வரம்புகளை விரிவுபடுத்துவதன் மூலம் தனிப்பட்ட வருமான வரிக் கட்டமைப்பை திருத்துவதற்கும் நாம் முன்மொழிகின்றோம்.
மாதத்திற்கு ரூ. 100,000 ஆக இருந்த வரி விலக்கு வரம்பை, ரூ. 150,000 ஆக எங்களால் உயர்த்த முடிந்தது.

இங்கு முன்மொழியப்பட்ட திருத்தங்கள் இதனை மேலும் ரூ. 162,500 ஆக உயர்த்தும். அதன்படி, மாதச் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் ரூ. 162,500 வரை பெறும் ஒருவர் தனது சம்பளத்திற்கு வரி செலுத்தத் தேவையில்லை.
6% வரி விகிதங்கள் ஏற்புடையதாகின்ற வரி வரம்புகள் மாதத்திற்கு 70,833 ஆகக் காணப்பட்ட அதேவேளையில், அதன் பின்னர் வரி மட்டம் ரூ. 41,667 ரூபாவிலிருந்து மாதத்திற்கு 50,000 ரூபாவாக விரிவுபடுத்தப்படும்.
6% விகிதத்திற்குப் பிறகு, 18% என்பதற்கு பதிலாக 12% விகிதத்தைப் பயன்படுத்தி, வரி விகிதங்கள் 6%, 12%, 18%, 24%, 30% மற்றும் 36% என சரிசெய்யப்படும். இத் திருத்தங்கள் ரூ. 358,000 இலிருந்து ரூ. 433,000 வரை அதிகூடிய ஏற்புடையதாகின்ற மாதாந்த வருமான அடிப்படை அளவை அதிகரிக்கின்ற அதேவேளை தனிப்பட்ட வரிசெலுத்துநர் ஒருவருக்கு ரூ. 750 தொடக்கம் ரூ. 15,750 வரையிலான மேலதிக மாதாந்த வரி நிவாரணத்தை வழங்கும்.
அதற்கமைய, 2025 இல் அறிமுகப்படுத்தப்பட்ட வரி மறுசீரமைப்புக்களினதும் 2027 இற்காக முன்மொழியப்பட்ட திருத்தங்களினதும் ஒன்றிணைந்த தாக்கத்தின் மூலம் எமது அரசாங்கத்தினால் வழங்கப்படும் மொத்த மாதாந்த வரி நிவாரணம் தனிப்பட்ட வரிசெலுத்துநர் ஒருவருக்கு ரூ. 4,250 இலிருந்து ரூ. 36,250 வரையாக உயர்வடைவதாக அவர் குறிப்பிட்டுள்ளது………
அரச நிறைவேற்றுதர அலுவலர்களுக்கான போக்குவரத்து கொடுப்பனவு அதிகரிப்பு அரச சேவை நிறைவேற்றுதர அலுவலர்களுக்கான போக்குவரத்துக் கொடுப்பனவை அதிகரிப்பதற்கு 2027 வரவு செலவு திட்டத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
பொது நிர்வாக சுற்றறிக்கை இல. 05/2016 இன் கீழ் உத்தியோகபூர்வ வாகனமொன்றுக்கு உரித்துடைய, ஆனால் உத்தியோகபூர்வ கடமையை நிறைவேற்றுவதற்குத் தங்களது சொந்த வாகனங்களைப் பயன்படுத்தும் நிறைவேற்றுத்தர உத்தியோகத்தர்களுக்கு, தற்போது மாதாந்தம் 50,000 ரூபாய் போக்குவரத்துக் கொடுப்பனவு வழங்கப்படுகின்றது.
தனிப்பட்ட வாகனங்களை உத்தியோகபூர்வ கடமைகளுக்குப் பயன்படுத்தும் போது பராமரிப்பு, பழுதுபார்த்தல் மற்றும் ஏனைய செயற்பாட்டுச் செலவுகளின் அதிகரிப்பைக் கவனத்திற் கொண்டு, வாகனம் உரித்துடைய அரச உத்தியோகத்தர்களுக்கு நிவாரணம் வழங்குவதிலும் பார்க்க அவர்கள் தனிப்பட்ட வாகனமொன்றைப் பயன்படுத்துவது அரசாங்கத்திற்கு மிகவும் நிதி ரீதியான விளைபயன் அதிகமாக இருப்பதால் அதனை ஊக்குவிப்பதன் பயனாக தற்போது வழங்கப்படும் மாதாந்த போக்குவரத்துக் கொடுப்பனவை 100,000 ரூபாவாக உயர்த்துவதற்கு முன்மொழியப்படுகிறது.
முழுமையாக மின்சாரத்தின் மூலம் இயங்கும் தனிப்பட்ட வாகனங்களைப் பயன்படுத்தும் உத்தியோகபூர்வ வாகனம் பெறத் தகுதியுடைய உத்தியோகத்தர்களுக்கு மின்சாரத்தின் மூலம் இயங்குகின்ற வாகனத்தைப் பயன்படுத்துவதனை ஊக்குவிக்கும் நோக்கில், பொது நிர்வாக சுற்றறிக்கை இல. 13/2008(V) இற்கு அமைவாக செலுத்தப்படுகின்ற மாதாந்தக் கொடுப்பனவை 2027 ஜூலை முதல் 150% இனால் அதிகரிப்பதற்கு வரவு செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.
மெட்ரோ பஸ் திட்டத்தில் தனியாரை ஈடுபடுத்த புதிய திட்டம்
இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட, கொழும்பை மையமாகக் கொண்ட மெட்ரோ பேருந்து சேவையை, கண்டி, காலி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய நகர்ப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் 2027 வரவு செலவு திட்ட உரையை நிகழ்த்தி வரும் நிலையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மெட்ரோ பேருந்து சேவைக்கு இது வரையிலும் அரசாங்கம் முதலீடு செய்துள்ளது.
ஏற்கனவே 120 இந்தக் மேம்பட்ட பேருந்துகள் இயக்கத்தில் உள்ளன.
2027 ஆம் ஆண்டில் மேலும் 50 பேருந்துகள் இந்தப் நிறுவனத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.
இதற்கு மேலதிகமாக, மின்சாரத்தில் இயங்கும் பேருந்துகளை அறிமுகப்படுத்தவும் நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.
இதற்காக, சீன அரசாங்கத்திடமிருந்து 100 பேருந்துகள் நன்கொடையாகக் கிடைக்கப்பட்டுள்ளன.
இந்தப் பேருந்துகளுக்கான டிப்போக்களை நிர்மாணிக்கவும், மின்னேற்றும் வசதியை வழங்க பயிற்சிகளை வழங்கவும் அடுத்த ஆண்டு முதல் நடவடிக்கை எடுக்கப்படும்.
இதற்காக ரூ. 4,500 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மெட்ரோ பேருந்துகளை தனியார் துறையையும் ஈடுபடுத்துவதை ஊக்குவிப்பதற்கு, தற்போது வீதி அனுமதிப் பத்திரங்கள் உள்ளவர்களுக்கு தற்போதுள்ள பேருந்துகளுக்கு பதிலாக தாழ்தளப் பேருந்துகளை பயன்படுத்த ஊக்குவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நெடுந்தூரப் பயணிகளுக்கு வசதியான மற்றும் பாதுகாப்பான சேவைகளை வழங்குவதற்காக, 600 குளிரூட்டப்பட்ட பேருந்துகளை இறக்குமதி செய்வதற்கு ஏற்கனவே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
மலைநாட்டு குறுகிய வீதிகளை கொண்ட கிராமிய பகுதிகளுக்கு 22 இருக்கைகளை கொண்ட 50 சிறிய பேருந்துகளை கொள்வனவு செய்ய 1000 மில்லியன் ரூபாய் ஒதுக்கிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இந்தியா 100 அம்பியுலன்ஸ் வண்டிகளை வழங்கும்
319 அம்பியுலன்ஸ் வண்டிகள் கொண்ட 1990 சுவசேரிய சேவையை மேம்படுத்துவதற்காக 1,725 மில்லியன் ரூபாய் இந்திய உதவியின் கீழ் 100 அம்பியுலன்ஸ் வண்டிகள் அடுத்த ஆண்டு முதல் சேவையில் இணைத்துக்கொள்ளப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் 2027 வரவு செலவு திட்ட உரையை நிகழ்த்தி வரும் நிலையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்
யானை தாக்கி உயிரிழந்தால் 2 மில்லியன் ரூபாய் இழப்பீடு
யானை – மனித மோதலின் காரணமாக வீட்டொன்றிற்கு ஏற்படும் சேதம் சார்பில் செலுத்தப்படுகின்ற இழப்பீட்டுத் தொகையை 2 இலட்சத்திலிருந்து 1 மில்லியன் ரூபாய் வரை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் 2027 வரவு செலவு திட்ட உரையை நிகழ்த்தி வரும் நிலையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
காட்டு யானைகள் உட்பட பாதுகாக்கப்பட்ட விலங்குகளின் தாக்குதலின் காரணமாக உயிரிழக்கும் அல்லது முழுமையாக ஊனமுறும் ஒருவருக்கு செலுத்தப்படுகின்ற இழப்பீட்டுத் தொகையை 1 மில்லியனிலிருந்து 2 மில்லியன் ரூபாய் வரை அதிகரிக்கப்படும்.

பகுதியளவு ஊனமுறும் ஒருவருக்கு செலுத்தப்படுகின்ற இழப்பீட்டுத் தொகையை ரூ. 150,000 இலிருந்து ரூபா 5 இலட்சம் வரையும், வீடு அல்லாத ஏனைய சொத்துக்களுக்கு செலுத்தப்படுகின்ற இழப்பீட்டுத் தொகையை ரூபா 2 இலட்சத்திலிருந்து ரூபா 5 இலட்சம் வரையும் அதிகரிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.
இலங்கையின் உயிர்வாழ் உரிமையொன்றாக விளங்கும் காட்டு யானைகள் வளத்தைப் பாதுகாப்பதற்கும், ஏற்படும் தொந்தரவுகளைத் தடுப்பதற்கும், இது சம்பந்தமான சட்டக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
தாவர வனவிலங்கு பாதுகாப்பு கட்டளைச் சட்டம் திருத்தப்பட்டு, தற்போது காணப்படுகின்ற சிறைத் தண்டனைக்கு மேலதிகமாக, காட்டு யானையைக் கொல்வது, வேட்டையாடுவது, சுடுவது, காயப்படுத்துவது அல்லது பிடிப்பதற்கான ரூ. 150,000 முதல் ரூபா 5 இலட்சம் வரையிலான அபராதத் தொகையை ரூபா 5 இலட்சத்திலிருந்து ரூபா 10 இலட்சம் வரை அதிகரிப்பதற்கு முன்மொழியப்படுகிறது.
சட்டவிரோதமாக யானையை வைத்திருப்பதற்கான அபராதத்தை, தற்போதுள்ள ரூ. 150,000 இலிருந்து ரூ. 250,000 வரையான அபராதத் தொகையை ரூபா 5 இலட்சத்திலிருந்து ரூபா 10 இலட்சம் வரை அதிகரிப்பதற்கு 2005 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க அபராதங்கள் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு முன்மொழியப்படுகிறது.
