மட்டு வைத்தியசாலையின் புதிய பணிப்பாளராக டாக்டர் சுகுணன்!

சுகாதார அமைச்சினால் மருத்துவ பீடத்திற்குரிய பௌதிக வளங்கள்,இருதய நோய்க்குரிய தொழில்நுட்ப இயந்திரம் வசதி, அவசர சத்திர சிகிச்சை புதிய கட்டட வசதி என்பன மட்டக்களப்பு வைத்திய சாலைக்கு வழங்கப்பட உள்ளதாக வைத்தியசாலை புதிய பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜி . சுகுணன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சினால் பௌதிக வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட உள்ளதுடன் பல மில்லியன் ரூபாய் செலவில் பெறுமதி மிக்க மருத்துவ உபகரணங்கள் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன்.

காலத்திற்கு ஏற்ப தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி நோயாளர்களுக்குரிய தரமான வைத்திய சேவைகளை முன்னெடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது மருத்துவ கூட மாணவர்களுக்கான கற்கை முறைகள் மேம்படுத்தப்பட உள்ளன.

வைத்தியசாலையின் சகல ஊழியர்களுக்குமான செயற்பாடுகள் மேம்படுத்தப்பட உள்ளத்துடன் சுகாதார அமைச்சினால் மட்டக்களப்பு போதனை வைத்தியசாலை இலங்கையின் சிறந்த வைத்திய சாலைகளில் ஒன்றாக தரம் உயர்த்த நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக புதிய வைத்திய பணிப்பாளர் இன்று 04.11.2026 கடமைகளை பொறுப்பேற்றதன் பின் ஊடகங்களுக்குத்தெரிவித்தார்

சுகாதார அமைச்சினால் நாடளாவிய ரீதியில் ஐந்து தேசிய போதனை வைத்தியசாலைகளுக்குரிய புதிய வைத்திய பணிப்பாளர்கள் அண்மையில் நியமிக்கப்பட்டனர்.

மட்டக்களப்பு போதனா வைத்யதிசாலையின் பணிப்பாளராக டாக்டர் ஜி.சுகுணன்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புதிய பணிப்பாளராக வைத்திய கலாநிதி ஜி.சுகுணன் இன்று தனது கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

​ இந்நிகழ்வில் யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த. சத்தியமூர்த்தி மட்டு மாநகர சபையின் முதல்வர் சிவம் பாக்கியநாதன், வைத்திய கலாநிதி தி. திருக்குமரன் உள்ளிட்ட வைத்திய அதிகாரிகள், வைத்திய நிபுணர்கள் கல்முனை வடக்கு வைத்திய சாலையின் வைத்தியர்கள்,தாதியர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

​ கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராகக் கடமைபுரிந்த மருத்துவர் ஜி. சுகுணன், சுகாதார அமைச்சரினால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வரதராஜன்