முரசு புயல் ஆந்திரா நோக்கி நகர்வு: இலங்கையில் இடியுடன் மழை!

வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த முரசு புயல் தீவிர புயலாக வலுப்பெற்று தற்போது ஆந்திராவை ஒட்டிய பகுதிகளில் கரையைக் கடந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாட்டின் தென்,ஊவா மாகாணங்களிலும் இரத்தினபுரி,அம்பாறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 1.00 மணிக்குக்குப் பிறகு ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யலாம்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளையில் ஏற்படும் தற்காலிக பலத்த காற்று,மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்ளை அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன் சபரகமுவை, மத்திய, ஊவா மாகாணங்களின் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான வானிலை நிலவக்கூடும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.