யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் சொகுசு பேருந்து இன்று காலை சுமார் 10.15 மணியளவில் பரந்தனில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
எதிர்த்திசையிலிருந்து வந்த கண்டர் ரக வாகனம் கடந்து சென்றபோது,
அதன் பின்புறத்தில் தனியார் சொகுசு பேருந்தின் முன்பகுதி மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.


அப்போது பேருந்தின் முன்பகுதி பலத்த சேதமடைந்து.பேருந்தின் சாரதியும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பேருந்தில் சுமார் 40 பயணிகள் கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்தினால் பயணிகளுக்குப் பல்வேறு அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ளன.
இவ்விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பரந்தன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கௌசல்யா
