நாட்டில் இன்று முதல் மழை அதிகரிக்கும்!

நாட்டில் இன்று (13) முதல் மழை அதிகரிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மத்திய, சபரகமுவை, ஊவா,தென் ஆகிய மாகாணங்களில் சில இடங்களில் 100-150 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப் படுகின்றது. நாட்டின் ஏனைய பகுதிகளில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யும்!

இத் தொகுதியின் தாக்கம் காரணமாக இன்று முதல் (13) அடுத்த சில நாள்களில் நாட்டிலும் நாட்டைச் சூழவுள்ள ஆழமான, ஆழம் குறைந்த கடற்பரப்புகளிலும் மழைவீழ்ச்சியில் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.