பிணை நிராகரிக்கப்பட்ட ஷிரந்தி ராஜபக்வை சிறைச்சாலை அதிகாரிகள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
வைத்தியசாலையின் இருதய நோய் சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் முதற்பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ தாக்கல் செய்திருந்த முன் பிணை மனுவை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
‘சிரிலிய சவிய’ மோசடி தொடர்பான நிதிப் குற்றப் புலனாய்வு பிரிவினால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளில் தாம் கைது செய்யப்படுவதைத் தடுக்கும் வகையில் அவர் மாளிகாகந்த நீதிமன்றத்தில் இந்த முன் பிணை மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு கடந்த 6ஆம் திகதி மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இது தொடர்பில் இன்றைய தினம் (12) நீதிமன்றத்தில் முன்னிலையாகி விபரங்களை அறிக்கை செய்யுமாறு நிதிப் குற்றப் புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரிக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே, இந்த முன் பிணை கோரிக்கையை நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.
