முன்னாள் ஜனாதிபதி மகிந்த மருத்துவமனையில் அனுமதி!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ திடீர் உடல்நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 இன்று (12) காலை தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிறிது நேரம் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) சிகிச்சை அளிக்கப்பட்டது.

 இருப்பினும், பின்னர் முன்னாள் ஜனாதிபதியின் சுகாதார நிலைமை குறித்து சில சாதாரண மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 மருத்துவ பரிசோதனை முடிவுகள் சாதகமாக உள்ளதால், அவர் தற்போது சாதாரண சிகிச்சை பிரிவின் கீழ் வைத்தியசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ளார்.