முஸ்லிம்களின் அடையாளத்தில் நடக்கும் கொடூர நாடகம்!

சமூக வலைத்தளங்களில் முஸ்லிம்களின் பெயர்கள், புகைப்படங்கள், அடையாளங்களைப் பயன்படுத்தி போலியான கணக்குகளை உருவாக்கி, பிற மதங்களுக்கு எதிராக விஷத்தைக் கக்கும் திட்டமிட்ட சதி குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் பாராளுமன்றத்தில் நேற்று (10) அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளார்.

​இது வெறும் சமூக ஊடகப் பிரச்சினை அல்ல… நாட்டின் அமைதியையும், இன நல்லிணக்கத்தையும் குலைக்கத் துடிக்கும் பேராபத்து.

​📌 பின்னணியில் இயங்கும் சூத்திரதாரிகள் யார்?
📌 நிதி வழங்கி இந்தச் சதியை இயக்குவது யார்?
📌 தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் சட்டம் பாயுமா?

​உண்மையை உணர்ந்து, போலிப் பிரசாரங்களை முறியடிக்க வேண்டிய நேரம் இது என்று கலாநிதி ஹிஸ்புல்லாஹ் சுட்டிக்காட்டினார்.

— ஊடகப்பிரிவு