ராகுல் காந்தி கைது நடவடிக்கைக்கு தவெக கண்டனம்!

தில்லியில் போராட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டதற்கு தவெக கண்டன தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தவெகவின் அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, தவெக ஆட்சிக்கு வருவதற்கு முன்பே எஸ்ஐஆர் நடைமுறையை எதிர்த்தது. இப்போதும் அதே நிலைப்பாட்டைத்தான் தவெக கொண்டிருக்கிறது. எஸ்ஐஆர் நடைமுறைகளை முன்னிறுத்தி, தில்லியில் போராட்டம் நடத்திய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதை தவெக கண்டிக்கிறது. கைது செய்யப்பட்ட விதம் ஆட்சேபகரமானது. இத்தகைய அணுகுமுறை கைவிடப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

எஸ்ஐஆர் விவகாரத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி, இந்தியா கூட்டணிக் கட்சி எம்.பி.க்களும் காங்கிரஸ் தொண்டர்களும் தில்லியில் ஜந்தர் மந்தர் பகுதியை நோக்கி இன்று (அக். 7) பேரணியாகச் செல்ல முயன்றனர். அவர்களை தில்லி காவல்துறையினர் தடுக்க முயன்ற நிலையில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தர்னாவில் ஈடுபட்டார்.

இதனைத் தொடர்ந்து, தர்னாவில் ஈடுபட்ட ராகுல் காந்தி உள்ளிட்டோரை காவல்துறையினர் குண்டுக்கட்டாகத் தூக்கி, வலுக்கட்டாயமாக காவல் வாகனத்தில் ஏற்றினர்.